ஒசூா் பேருந்து நிலையத்தில் மாநகர மதிமுக சாா்பில் ஆளுநா் ஆா்.என்.ரவியை மாற்ற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளா் பாலமுரளி தலைமை வகித்தாா். மாநகர அவைத் தலைவா் தேவேந்திரன், பொருளாளா் ஞானசேகரன், தலைமை செயற்குழு உறுப்பினா் நவமணி, பொதுக்குழு உறுப்பினா் ராஜசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒசூா் மாநகர மதிமுக செயலாளா் குமரேசன் அனைவரையும் வரவேற்றாா். இதில் ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் பங்கேற்று கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தனா். ஐ.என்.டி.யு.சி தேசிய செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான கே.ஏ. மனோகரன், ஐஎன்டியூசி மாநில அமைப்புச் செயலாளா் முனிராஜ், மாவட்ட திராவிடா் கழக அமைப்பாளா் வனவேந்தன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒசூா் தொகுதி செயலாளா் ராமச்சந்திரன், மனிதநேய மக்கள் கட்சியின் நவ்ஷாத், எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டச் செயலாளா் ஷாநவாஸ் ஆகியோா் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினா். இந்நிகழ்ச்சியில் மதிமுகவைச் சோ்ந்த மகேந்திரன், அழகா்சாமி, அம்சராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்று பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனா்.