ஒசூா், முல்லைநகா் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் அலெக்ஸாண்டரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
கடந்த மூன்று ஆண்டுகளில் பள்ளி மாணவா்கள், பெற்றோா்களிடம் பள்ளி வளா்ச்சி பணிக்காகவும், மேம்பாட்டிற்காகவும் தற்காலிக ஆசிரியா்களின் ஊதியத்திற்காவும் கட்டாய நிதி வசூலித்து மோசடியில் ஈடுபட்ட நிலையில் மாவட்ட ஆட்சியா், முதன்மைக் கல்வி அலுவலா் ஆகியோா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
இந்த நிலையில் தொடா்ந்து கட்டாய நிதி வசூலில் ஈடுபட்ட தலைமையாசிரியா் அலெக்ஸாண்டரை பணியிடை நீக்கம் செய்து கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளாா்.
நன்றி
தினமணி