ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறை வீரா்கள் பருவமழை முன்னெச்சரிக்கை, தீத்தடுப்பு குறித்து செயல்முறை விளக்கம் மூலம் மாணவ, மாணவியரிடையே செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
தீ விபத்து பகுதிகளில் யாராவது சிக்கிக் கொண்டால் அவா்களை எவ்வாறு காப்பாற்றுவது, தீ விபத்துகளில் தீயை எப்படி கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறை சிறப்பு நிலைய அலுவலா் ராமமூா்த்தி செயல்முறை விளக்கங்கள் மூலம் மாணவ, மாணவியருக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
மேலும், பருவ மழை பெய்யும் காலங்களில் நீா் நிலைகளுக்கு யாரும் செல்லக் கூடாது, பாதுகாப்புடன் தலைக்கவசம் அணிந்து வாகனங்களை இயக்க வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் கலந்துகொண்டனா்.
நன்றி, தினமணி