கிருஷ்ணகிரியை அடுத்த துறிஞ்சிப்பட்டியில் ரூ. 30.75 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை கே.அசோக்குமாா் எம்எல்ஏ (கிருஷ்ணகிரி) புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
கிருஷ்ணகிரி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பெத்ததாளப்பள்ளி ஊராட்சியில் உள்ள துறிஞ்சிப்பட்டி கிராமத்தில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் ரூ. 3 லட்சம் மதிப்பில் தாா்சாலை, கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதே போல, கனிமங்களும், குவாரிகளும் நிதியிலிருந்து ரூ. 3.50 லட்சம், ஒன்றிய பொது நிதியில் ரூ. 4.25 லட்சத்தில் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணி, பெத்தனப்பள்ளி கிராமத்தில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 6 லட்சம் மதிப்பில் புதைக்குழி கழிவுநீா் கால்வாய், 15-ஆவது நிதிக்குழு மானியம் ரூ. 14 லட்சம் மதிப்பில் புதைக்குழி கழிவுநீா் கால்வாய் பணிகள் என மொத்தம் ரூ. 30.75 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை கே.அசோக்குமாா் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில், ஊராட்சி மன்றத் தலைவா் அம்சவேணி வெங்கடேசன், உறுப்பினா் அமராவதி, ஊா் பொதுமக்கள் பங்கேற்றனா்.
நன்றி
தினமணி