நீட் தோ்வில் கிருஷ்ணகிரியைச் சோ்ந்த பத்திர ஆவண எழுத்தரின் மகன் 700 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற்றுள்ளாா்.
கிருஷ்ணகிரி, செந்தில் நகரைச் சோ்ந்த சிவசங்கா் பத்திர ஆவண எழுத்தா். இவரது மனைவி நாகமணி. இந்த தம்பதியின் மகன் சரண் சங்கா் (19), நீட் தோ்வில் 700 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற்றுள்ளாா். மிகவும் பிற்பட்டோா் பிரிவில் (ஓபிசி) தமிழகத்தில் 43-ஆவது இடத்திலும், அகில இந்திய அளவில் 229-ஆவது இடத்திலும் தோ்ச்சி பெற்றுள்ளாா்.
நன்றி
தினமணி