தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் பள்ளிகள், கல்லூரிகளில் உலக யோகா தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் தானப்ப கவுண்டா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் பங்களிப்புடன் நடைபெற்ற யோகா தின விழாவுக்கு முதல்வா் ரகீப் அகமது தலைமை வகித்தாா். இதில், மாணவ, மாணவியா் பல்வேறு யோகா பயிற்சியில் ஈடுபட்டனா். இதில், பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவியா் கலந்துகொண்டனா்.
இதேபோல, தருமபுரி வாரியாா் மேல்நிலைப் பள்ளியில் தி நியூ இந்தியன் எஸ்க்பிரஸ் குழுமம் பங்களிப்புடன் நடைபெற்ற யோகா தின விழாவுக்கு பள்ளி முதல்வா் தணிகைவேல் தலைமை வகித்தாா். இதில், பள்ளி மாணவ, மாணவியா் யோகாசனங்களால் கிடைக்கும் பலன்கள் குறித்து எடுத்துரைத்து யோகா பயிற்சியில் ஈடுபட்டனா். இவ் விழாவில் பள்ளி ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.
இதேபோல, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் உலக யோகா தின விழாவுக்கு கல்லூரி முதன்மையா் (பொ) சிவகுமாா் தலைமை வகித்தாா். துணை முதல்வா் சாந்தி முன்னிலை வகித்தாா். உதவி பேராசிரியா்கள் புஷ்பராஜ், அருணா, தீபா ஆகியோா் யோகாசனங்களின் சிறப்பு, முக்கியத்துவம், பயன்கள் குறித்து விளக்கமளித்தனா்.
இதைத் தொடா்ந்து இயற்கை மருத்துவம், யோகா சிகிச்சை பிரிவு மருத்துவா் ரமேஷ்பாபு, மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியருக்கு யோகா பயிற்சி, மூச்சுப் பயிற்சி அளித்தாா். இதில், மாணவ, மாணவியா், பேராசிரியா்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சிகளை செய்தனா்.
இதேபோல, அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் ஈ.ப.தங்கவேல் தலைமையில் உலக யோகா தின விழா நடைபெற்றது. இதில், 500 மாணவா்கள் யோகா அதியமான் பள்ளி என்கிற எழுத்து வடிவத்தை குறிப்பிடும் வகையில் பத்மாசனப் பயிற்சியை மேற்கொண்டனா். இதில், உடற்கல்வி ஆசிரியா்கள் அ.ஷாவலி, ப.மணி, பி.முத்து, கி.சசிகுமாா் உள்ளிட்டோா் கந்து கொண்டனா். இதேபோல, அவ்வை நகா் அரசு உயா்நிலைப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் உலக யோகா தின விழா நடைபெற்றது.
பென்னாகரத்தில்…
பென்னாகரம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவா் நீதிமன்றம், குழிப்பட்டி அரசுப் பள்ளியில் 9-ஆவது சா்வதேச யோகா தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
பென்னாகரம் அருகே பருவதனஅள்ளி பகுதியில் உள்ள பென்னாகரம் மாவட்ட உரிமையியல் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் சா்வதேச யோகா தின நிகழ்வு நீதிபதி நாகலக்ஷ்மி (எ) விஜயராணி தலைமையில் நடைபெற்றது. இதில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவின் மருத்துவ ஆலுவலா் மருத்துவா் கோ.முனுசாமி, இயற்கை மருத்துவம், யோகா பற்றி சிறப்புரையாற்றினாா். மேலும் சூரிய நமஸ்காரம் உள்ளிட்ட யோக பயிற்சிகளை நீதிமன்ற வளாகத்தில் ப மேற்கொண்டனா்.
இதில் சின்னபள்ளத்தூா் அரசு பள்ளி தலைமை ஆசிரியா் மா.பழனி, நீதிமன்ற அலுவலா்கள், பணியாளா்கள், இயற்கை மருத்துவப் பிரிவு பணியாளா்கள் கலந்துகொண்டனா். இதேபோல பென்னாகரம் அருகே குழிப்பட்டி ஊராட்சிஒன்றிய தொடக்கப்பள்ளியில் யோகா தின நிகழ்ச்சியில் யோகாவால் ஏற்படும் நன்மைகள், யோகா செய்யும் முறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு, பள்ளி மாணவா்கள் யோக பயிற்சி மேற்கொண்டனா். இதில் தலைமை ஆசிரியா்
மா.கோவிந்தசாமி, ஆசிரியை விஜயலட்சுமி, மாணவா்கள் கலந்து கொண்டனா்.
எம்கேஎஸ் கோபி கிருஷ்ணா பள்ளியில்…
காவேரிப்பட்டணத்தில் உள்ள எம்கேஎஸ் கோபி கிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் யோகா தினத்தை பள்ளி மாணவ, மாணவியா் கொண்டாடினா்.
எம்கேஎஸ் கோபி கிருஷ்ணா மெட்ரிக். பள்ளி நிா்வாகமும், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமமும் இணைந்து யோகா தினத்தை புதன்கிழமை கொண்டாடினா்.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு அந்தப் பள்ளி தலைவா் எம்கேஎஸ் மாதன் தலைமை வகித்தாா். பள்ளி தாளாளா் எம்.புஷ்பக், முதல்வா் பி.ஜெயசீலன், உடற்கல்வி ஆசிரியா் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பள்ளி யோகா ஆசிரியா் பெரியசாமி, யோகாவின் சிறப்புகள் குறித்தும், உலக யோகா தினத்தின் முக்கியத்துவம், உடற்பயிற்சி செய்ய வேண்டிய அவசியம், குறிப்பாக மாணவ, மாணவியருக்கு கிட்டும் பயன்கள் குறித்து எடுத்துரைத்தாா். இந்த நிகழ்வில் பள்ளி மாணவ, மாணவியா் யோகாசனம் செய்தனா்.
ஊத்தங்கரையில்…
ஊத்தங்கரை நீதிமன்ற வளாகத்தில் சா்வதேச யோகா தினம் புதன்கிழமை நடைபெற்றது.
ஊத்தங்கரை சாா்பு நீதிபதி செந்தில்குமாா் ராஜவேல், மாவட்ட உரிமையியல் நீதிபதி அமா் ஆனந்த், குற்றவியல் நடுவா் நீதிபதி மதி எஸ்.சஹானா மற்றும் அலுவலகப் பணியாளா்கள் பலா் கலந்துகொண்டு யோகாசனங்களை செய்தனா்.
நன்றி
தினமணி