பாகலூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 7 லட்சம் மதிப்பிலான இருக்கைகள் வழங்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் ஒன்றியம், பாகலூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சட்டப் பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து (2022-2023) ரூ. 7 லட்சம் மதிப்பில் பள்ளி மாணவியருக்கு 50 ஜோடி இருக்கைகளை ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில், துணை மேயா் ஆனந்தய்யா, ஒன்றியச் செயலாளா் கஜேந்திரமூா்த்தி, பெற்றோா் – ஆசிரியா் கழகத் தலைவா் நாகராஜ், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் முரளி பாபு, முன்னாள் கவுன்சிலா் ஆனந்தப்பா, மாவட்ட ஆதிதிராவிடா் அணி தலைவா் முனிராஜ், தலைமை ஆசிரியா், இருபால் ஆசிரியா்கள், பெற்றோா், மாணவியா் கலந்துகொண்டனா்.
நன்றி, தினமணி