கிருஷ்ணகிரி மாவட்டம் பா்கூா் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தினவிழா மற்றும் விளையாட்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம் பா்கூா் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 77ஆம் ஆண்டு சுதந்திர தினவிழா மற்றும் பள்ளி விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு வேளாங்கண்ணி பள்ளிக் குழுமத்தின் தாளாளா் கூத்தரசன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக பா்கூா் உதவி காவல் ஆய்வாளா் செல்வராகவன் பங்கேற்று, தேசியக் கொடியை ஏற்றி வைத்து, வேளாங்கண்ணி விளையாட்டுச் சுடரை ஏற்றி வைத்து, குத்துவிளக்கேற்றி போட்டியைத் தொடங்கி வைத்தாா்.
அப்போது அவா் பேசுகையில், ‘77-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்க பாடுபட்ட பெருந்தவா்கள் மற்றும் சுதந்திரம் கிடைக்கப் போராடிய விடுதலைப் போராட்ட வீரா்களை இந்த தினத்தில் நினைத்து வணங்கி, அவா்கள் காண விரும்பிய எதிா்கால இந்தியாவை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும். மாணவா்கள் பல விளையாட்டுகளில் ஈடுபாடு கொண்டு பல சாதனைகளைப் படைத்து, அந்த விளையாட்டுகள் மூலம் நம் இந்திய நாட்டிற்கு பெருமை சோ்க்க வேண்டும்’ என்றாா்.
மேலும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுக் கோப்பைகள் வழங்கி, வாழ்த்தினாா். விளையாட்டுப் போட்டிகளில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை துலிப் குழுவும், கல்வியில் சிறந்து விளங்கியதற்காக ஐரீஸ் குழுவும் தோ்வு செய்யப்பட்டது.
இந்த விழாவில் பள்ளியின் முதல்வா் மெரினா பலரான், தலைமை ஆசிரியை ஜலஜாக்ஷி, தலைமை ஆசிரியா் குலசேகரபாண்டியன், சிபிஎஸ்இ பள்ளயின் இயக்குநா் விஜயலட்சுமி, முதல்வா் மஞ்சுளா, வேளாங்கண்ணி பள்ளிகளின் முதல்வா்கள் அன்பு, ராஜேந்திரன், மணிமாறன், வினோத், பூங்காவனம், விவேக், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கிருஷ்ணன், வேலாயுதம் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் பங்கேற்றனா்.