கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை கூட்ரோடு அருகில் உள்ள பொன்னியம்மன் கோவிலுாரில் அமைந்துள்ள பொன்னியம்மன் கோவில் மஹா கும்பாபிேஷகம் நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை கணபதி பூஜை, கங்கனம் கட்டுதல், கங்கை பூஜை, தீர்த்தக்குடம், முளைப்பாரி அழைத்தல் ஆகிய நிகழ்ச்சியும், மாலை மஹா கணபதி ஹோமம், எஜமான சங்கல்பம், வாஸ்து சாந்தி ஹோமம், பிரவேச பலி, பிம்ப சுத்தி, தான்யாவாசம், எண்வகை மருந்து சான்றுதல் ஆகியவையும், இரவு யாகசாலை பிரவேசம், கலச ஸ்தாபனம், முதல் காலயாக பூஜை, வேத பாராயணம், நவகிரஹ ஹோமம், மகா பூர்ணாஹூதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெற்றன.
நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜை, வேதபாராயணம், சுதர்சன ஹோமம், பொன்னியம்மன் மூலவர்க்கு 108 மூல மந்திர ஹோமம், மகா பூர்ணாஹூதி, மகா தீபாராதனை ஆகியவை நடந்தன. காலை 9.30 மணிக்கு கடம் புறப்பாடு, விநாயகர், முருகர் வள்ளி தெய்வானை, பொன்னியம்மன் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிேஷகம் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து மஹா தீபாராதனையும், தீர்த்தப் பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெற்றன. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன.
![](https://www.hellokrishnagiri.in/wp-content/uploads/2023/09/ponniyamman-kovilur-853x620.jpg)