கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் அணியில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் விடப்படுகிறது.
இது குறித்து போச்சம்பள்ளி பெட்டாலின் 7 அணியின் தலைமை சிறப்பு காவலர் தளவாய் ஜெயந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு சிறப்புக்காவல் 7ம் அணி, போச்சம்பள்ளியில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 8 காவல் வாகனங்கள் (அசோக்லேலாண்ட் கார்கோ 4, டெம்போ டிராவலர் 2, ஜீப் 2 எந்த நிலையில் உள்ளதோ, அதே நிலையில் வருகின்ற 12ம் தேதி பகல் 12 மணிக்கு போச்சம்பள்ளியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் 7ம் அணி தலைமையகத்தில் வைத்து பொது ஏலம் விடப்படும் என்று அறிவிக்கப்படுகிறது. மேலும், ஏலம் எடுக்க விரும்புவோர் வருகிற 11ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை போச்சம்பள்ளியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் 7ம் அணி வாகனப்பிரிவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டுக் கொள்ளலாம்.
மேலும், வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் அன்றே ஆறு சக்கர வாகனத்திற்கு ரூ. 3 ஆயிரமும், நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.2 ஆயிரமும் முன் பணம் செலுத்தி, தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும். ஏலம் எடுத்தவுடன் முழுத் தொகை மற்றும் அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரி 18 சதவீதம் முழுவதையும் அரசுக்கு ரொக்கமாக செலுத்தி, வாகனத்தை பெற்று கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.