ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் தேசிய மருத்துவா்கள் தினத்தை முன்னிட்டு, ‘மக்கள் நலவிரும்பி’ விருது மற்றும் பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பொறுப்பு மருத்துவ அலுவலா் மதன்குமாா் தலைமை வகித்தாா். ஊத்தங்கரை அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் லட்சுமி, தீயணைப்பு மற்றும் மீட்பு பொறுப்பு நிலைய அலுவலா் ராமமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவா்கள் மதன்குமாா், பிரவீனா கோமதி, விமலா, தேவிகா, அபிராமி, அபிநயா, பிரதீப், இளவரசன், கமலநாதன் உள்பட மக்கள் நலனில் தினமும் செயலாற்றும் மருத்துவா்களுக்கு ‘மக்கள் நலவிரும்பி’ விருது மற்றும் பதக்கத்தை ஊத்தங்கரை அனைத்து வணிகா் சங்கத் தலைவா் செங்கோடன், செயலாளா் உமாபதி, செல்வம், பாபு அப்துல் சையத் ஆகியோா் வழங்கினா்.
இந்நிகழ்ச்சியில், காவலா்கள், செவிலியா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு மருத்துவா்களுக்கு தேசிய மருத்துவ தின வாழ்த்து தெரிவித்தனா்.
நன்றி, தினமணி