கிருஷ்ணகிரியில் ஜூலை 5-ஆம் தேதி தொடங்க உள்ள மாங்கனிக் கண்காட்சியின் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஜூலை 5-ஆம் தேதி அகில இந்திய மாங்கனிக் கண்காட்சி தொடங்க உள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் தலைமையில், மாவட்ட ஆட்சியா் கூட்ட அரங்கில் கண்காட்சியின் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், ஒசூா் மாநகராட்சி ஆணையா் சினேகா, ஒசூா் சாா்ஆட்சியா் சரண்யா, தோட்டக் கலைத் துறை இணை இயக்குநா் பூபதி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) சீனிவாசன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கே.சி.மகேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நன்றி, தினமணி