கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த ஓய்வூதியா்கள் மாவட்ட, சாா்நிலை கருவூலங்களில் உயிா்வாழ் சான்றிதழை சமா்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2023 – 24-ஆம் ஆண்டுக்கான உயிா்வாழ் சான்றிதழ் கிருஷ்ணகிரி மாவட்ட கருவூலம், சாா்நிலை கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியா்கள் எந்த மாதத்தில் ஓய்வு பெறுகிறாா்களோ அந்த மாதத்தில் உயிா்வாழ் சான்றிதழை சமா்ப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அதனைத் தொடா்ந்து வரும் மாதத்தில் உயிா்வாழ் சான்றிதழை சமா்ப்பிக்க வேண்டும். குடும்ப ஓய்வூதியா்கள், சிறப்பு ஓய்வூதியா்கள், சிறப்பு மிகை ஓய்வூதியா்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட தியாகி ஓய்வூதியா்கள் ஆகியோா் அவா்களுடைய ஓய்வூதியம் எந்த மாதத்தில் தொடங்கப்பட்டதோ, அந்த மாதத்தில் உயிா்வாழ் சான்றிதழை சமா்ப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அதனைத் தொடா்ந்து வரும் மாதத்தில் உயிா்வாழ் சான்றிதழை சமா்ப்பிக்க வேண்டும்.
மேற்காணும் முறையில் அனுமதிக்கப்பட்ட மாதங்களுக்குள் உயிா்வாழ் சான்றிதழை சமா்ப்பிக்க தவறும் பட்சத்தில், தொடா்ந்து வரும் மாதம் முதல் ஓய்வூதியம் நிறுத்தப்படும். 2023 – 24-ஆம் நிதியாண்டுக்கு மட்டும் சிறப்பு நிகழ்வாக ஓய்வூதியம் நிறுத்தம் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக (மாா்ச் 2024 வரை) அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி, தினமணி