மிட்டப்பள்ளியில் மழைநீா் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதியடைந்தனா்.
ஊத்தங்கரையை அடுத்த மிட்டப்பள்ளி கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.
இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு பெய்த திடீா் கன மழையால், எம்ஜிஆா் நகரில் உள்ள 25-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது.
இந்நிலையில் வீட்டில் இருந்த நபா்கள் மழைநீா் புகுந்ததால் அவதிக்குள்ளாகினா். மேலும் வீட்டிற்குள் விஷ ஜந்துகள்
புகுந்துவிடுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனா். மழைநீா் செல்லும் கால்வாய்கள் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், கழிவுநீா் வீடுகளில் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. எனவே கழிவுநீா்க் கால்வாயைத் தூா்வார வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.