கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் செவ்வாய் கிழமை அன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமுக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டப் பயனாளிகளுக்கு உரிய திட்ட பணிகளை மேற்கொள்ள சிறப்பு குறை தீர் முகாம் நடத்தப்படும். முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் விண்ணப்பித்து பல வருடங்கள் கடந்தும் வைப்புத்தொகை ரசீதுகள் கிடைக்கப்பெறாமல் உள்ள பயனாளிகள், 18 வயது பூர்த்தியடைந்தும் முதிர்வுத்தொகை கிடைக்கப்பெறாமல் உள்ள பயனாளிகள் ஆகியோர் உரிய சான்றுகளோடு ஆஜராகி இச்சிறப்பு குறை தீர் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
இத்திட்டத்தில் பயனடைய, இத்திட்டத்தில் பதிவு செய்து நாளது தேதி வரை வைப்புத்தொகை ரசீதுகள் கிடைக்கப்பெறாத பயனாளிகள் இ&சேவை மையம் மூலம் விண்ணப்பித்த ஒப்புகை ரசீதுடன் வடிய இணைய வழி விண்ணப்பத்துடன் இச்சிறப்பு முகாமில் கலந்துகொள்ள வேண்டும். இத்திட்டத்தில் பதிவு செய்து வைப்புத்தொகை ரசீது பெற்று, 18 வயது பூர்த்தியடைந்து முதிர்வுத்தொகை கிடைக்கப்பெறாத பயனாளிகள், வைப்புத்தொகை ரசீது நகல், 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், பிறப்பு சான்றிதழ், பயனாளியின் நடப்பில் உள்ள வங்கிக் கணக்கு முகப்பு புத்தக நகல், பயனாளியின் (தாய் மற்றும் மகள்) வண்ணப் புகைப்படம் &2 ஆகிய சான்றுகளோடு இச்சிறப்பு முகாமில் கலந்துகொள்ள வேண்டும்.
மேலும், இந்த திட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகம், அறை எண்.21, மாவட்ட கலெக்டர் அலுவலகம், கிருஷ்ணகிரி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
நன்றி, தினமணி