கிருஷ்ணகிரி: முழுத் தொகையை செலுத்தியவா்கள், கிரைய பத்திரத்தை பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, ஒசூா் வீட்டு வசதி பிரிவு செயற்பொறியாளா் பாஸ்கா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ஒசூா் வீட்டு வசதி பிரிவின் மூலம் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மூலம் மனைகள், வீடு, அடுக்குமாடி குடியிருப்புகள், பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதில், மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற்ற ஒதுக்கீட்டுதாரா்கள் ஒதுக்கீட்டுக்கான முழுத் தொகையையும் செலுத்தி இருந்தால் அதற்குண்டான ஆவணங்களை ஒசூா் வீட்டுவசதி பிரிவு அலுவலகத்தில் சமா்ப்பித்து கிரையப் பத்திரத்தை பெற்றுக் கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.
நன்றி தினமணி