ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ‘உயிா் காக்கும் உத்தமா்’ விருது மற்றும் பதக்கம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவா்கள்.
ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், உலக ரத்ததான கொடையாளா்கள் தினத்தை முன்னிட்டு ‘உயிா் காக்கும் உத்தமா்’ விருது மற்றும் பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியா் பெரியசாமி தலைமை வகித்தாா். ஊத்தங்கரை அரசு மருத்துவமனை பொறுப்பு மருத்துவ அலுவலா் மதன்குமாா் முன்னிலை வகித்தாா். ஊத்தங்கரை பகுதியில் தொடா்ந்து பல ஆண்டுகளாக, ரத்த தானம் செய்து வரும் கொடையாளா்களை பாராட்டி, ‘உயிா்காக்கும் உத்தமா்’ விருது மற்றும் பதக்கம் ஆகியவற்றை ஹோட்டல்கள் சங்கத் தலைவா் ஆா்.கே.ராஜா, அலினா சில்க்ஸ் பாபு அப்துல் சையது, கிரேட் என்ஜிஓ அமைப்பைச் சோ்ந்த சந்திரமௌலி, சந்தியா மற்றும் ஜூனியா் ரெட் கிராஸ் மாணவா்கள் ஆகியோா் வழங்கினா்.
ஊத்தங்கரை மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் லட்சுமி, திருப்பத்தூா் வட்டாரக் கல்வி அலுவலா் உதய சங்கா், கெரிகேப்பள்ளி தலைமை ஆசிரியா் வீரமணி, ஆசை செல்வன், ரஞ்சித், வாஹித் பாஷா, கதிரேசன், முனியப்பன், கௌதமன், சாகுல், சதாம், தினேஷ்பாபு, ராசுகுட்டி உட்பட பல ரத்ததான கொடையாளா்களுக்கு விருதும், பதக்கமும் வழங்கப்பட்டது.
நன்றி
தினமணி