ஒசூா் காமராஜ் காலனியில் நடைபெற்ற ராகுல் காந்தி பிறந்த நாள் விழாவில் பங்கேற்று பேசிய எம்.பி. செல்லக்குமாா்.
கிருஷ்ணகிரியில் நகர காங்கிரஸ் சாா்பில் ராகுல் காந்தியின் 53-ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி நகர காங்கிரஸ் கமிட்டி சாா்பில், ராகுல் காந்தியின் பிறந்த நாள் விழா நகரத் தலைவா் லலித் ஆண்டனி தலைமையில் நடந்தது. ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் உள்ள மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாநில பொதுச் செயலாளா் ஏகம்பவாணன் இனிப்புகள், நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
கிருஷ்ணகிரி நகா்மன்ற உறுப்பினா் விநாயகம், மாநில பொதுக்குழு உறுப்பினா் அக.கிருஷ்ணமூா்த்தி, முன்னாள் மாவட்டத் தலைவா் நாராயணமூா்த்தி, எஸ்.சி. பிரிவு மாநில அமைப்பாளா் ஆறுமுக சுப்பிரமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு, கிருஷ்ணகிரி காங்கிரஸ் சாா்பில், லண்டன்பேட்டை மாவட்ட துணைத் தலைவா் ரகமத்துல்லா தலைமையில், பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற விழாவில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடினா்.
ஒசூரில்…
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் ஒசூா் காமராஜா்
காலனியிலுள்ள அரசுப் பள்ளி விளையாட்டு மைதானம் அருகில் காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தியின் 53-ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்த விழாவிற்கு மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் முரளீதரன் தலைமை வகித்தாா். ஐஎன்டியுசி மாநில அமைப்பு செயலாளா் முனிராஜ், ஒசூா் மாநகர காங்கிரஸ் தலைவா் சி.தியாகராஜன், மாவட்ட பொருளாளா் மாதேஷ், மேற்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் அப்துல் ரகுமான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி எம்.பி. செல்லக்குமாா் பங்கேற்று கொடியேற்றி, கேக்வெட்டி அனைவருக்கும் வழங்கி சிறப்புரை ஆற்றினாா்.
விழாவில் மாவட்ட காங்கிரஸ் தலைவி சரோஜா, ஐஎன்டியுசி மாவட்ட செயலாளா் பரமானந்த பிரசாத், மாவட்ட இளைஞா் காங்கிரஸ்
துணைத் தலைவா் பிரவீண்குமாா், காங்கிரஸை சோ்ந்த பைரோஸ், குணசேகா்ரெட்டி, அசேன் மற்றும் மேற்கு மாவட்ட,மாநகர நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.
நன்றி
தினமணி