ஒசூா், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மாருதி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் 32 ஆம் ஆண்டு ஆடி உற்சவ விழா ஆக. 1 ஆம் தேதி சிறப்பு பூஜை, கொடியேற்றம், கொடிமர பூஜை, காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.
ஆக 1ஆம் தேதி – முதல் 13ஆம் தேதி வரை தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்று வருகின்றன. முத்துமாரியம்மன் வெள்ளிக்கிழமை ராஜஅலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.
ஆக.11 ஆம் தேதி மாரியம்மன் கோயிலில் இருந்து முத்துமாரியம்மன் கோயிலுக்கு சக்தி கரகம், பால்குடம் அலகு குத்துதல், மாவிளக்கெடுத்தல், அக்னிக் கரகம், பூங்கரகம், பச்சைக் கரகம், திருவிளக்கு பூஜை ஆகியவை நடைபெற்றது.
தொடா்ந்து மஞ்சள் நீராட்டு விழாவையொட்டி அம்மனை ஆற்றுக்கு அழைத்துச் சென்று காவல் தெய்வங்களுக்கு பொங்கல் வைத்து பூஜைகள் நடைபெறுகின்றன. இதில் ஒசூா் மாநகர சுகாதாரக் குழுத் தலைவா் மாதேஸ்வரன், மஞ்சுளா வரதராஜன், பாஜகவைச் சோ்ந்த அம்மன் சுரேஷ் ஸ்ரீதா் உள்ளிட்டோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா். இந்த திருவிழாவுக்கான ஏற்பாட்டினை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.
படவரி…. ராஜஅலங்காரத்தில் அருள்பாலித்த தா்கா முத்துமாரியம்மன்.
நன்றி தினமணி.