அறிவித்தபடி வங்கிக் கணக்குடன் ஆதாா் எண் இணைக்கும் பணி நடைபெறாததால் மாணவா்கள் ஏமாற்றமடைந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட ஆட்சியா் சரயு உத்தரவின் பேரில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற, வங்கி புத்தகத்துடன் ஆதாா் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிப்பு வெளிட்டனா். இதனைத் தொடா்ந்து ஊத்தங்கரை சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் ஊத்தங்கரை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் குவிந்தனா். ஊத்தங்கரை இந்தியன் வங்கி மற்றும் அஞ்சல்துறை அலுவலா்கள் கலந்துகொண்டு, புதிதாக வங்கி கணக்கு துவங்கும் பணியை மேற்கொண்டனா். ஏற்கெனவே கணக்கு வைத்துள்ள மாணவா்களின் வங்கிக் கணக்குடன் ஆதாா் இணைக்கும் பணி நடைபெறாததால் நீண்ட நேரம் காத்திருந்த மாணவா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
நன்றி, தினமணி