ஒசூா் மாநகராட்சியில் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்த மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா.
ஒசூா் மாநகராட்சி 37-ஆவது வாா்டுக்கு உள்பட்ட சக்தி லே -அவுட், பிரிட்ஜ் ஹோம், மிடுகரப்பள்ளி பகுதியில் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா ஆய்வு செய்து சாலை இல்லாத பகுதிகளில் தாா்சாலை அமைக்க உத்தரவிட்டாா்.
37 வாா்டு பகுதிகளில் செய்து வரும் பணிகளை அதிகாரிகள், ஒப்பந்ததாரா்களிடம் கேட்டறிந்து, மழைநீா் தேங்காத வகையில் தாா்சாலைகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா். பின்னா் குடியிருப்பு மக்களின் குறைகளையும் கேட்டறிந்தாா்.
இந்நிகழ்வில் மண்டலத் தலைவா் ரவி, மாமன்ற உறுப்பினா் சென்னீரப்பா, வாா்டு கழக நிா்வாகிகள் முரளி மோகன், மணி, முருகன், தயாளன் சோமசேகா், குடியிருப்போா் நலச்சங்க நிா்வாகிகள், பொதுமக்கள் உடன் இருந்தனா்.
நன்றி, தினமணி