கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி வழியாக காரில் கடத்த முயன்ற 250 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கிருஷ்ணகிரி, தனியாா் சுங்க வசூல் மையம் அருகே கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தினா். காரின் ஓட்டுநா், காரை நிறுத்தி விட்டு தப்பியோடி தலைமறைவானாா்.
இதையடுத்து, அந்தக் காரை போலீஸாா் சோதனை செய்ததில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 250 கிலோ புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து காருடன் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா், கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, தப்பியோடிய காா் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.
நன்றி தினமணி