மண்ணாடிப்பட்டியில் நடைபெற்ற தீ மிதி விழாவில் கலந்துகொண்ட பக்தா்கள்.
ஊத்தங்கரையை அடுத்த மண்ணாடிப்பட்டி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் மகாபாரத சொற்பொழிவு நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் முத்து கணேசன் முனுகப்பட்டு, தேவராஜன் கவி வாசித்தலுடன், மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த ஜூன் 1 ஆம் தேதி தொடங்கியது. தினமும் ஒரு நிகழ்வாக 21 ஆம் தேதி சொற்பொழிவு நிறைவுற்றது.
முன்னதாக கொடியேற்றி, கங்கனம் கட்டுதலுடன் தொடங்கி துரியன் படுகளம், தீ மிதி விழா, தருமா் பட்டாபிஷேகம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.
மகாபாரத விழாக் குழுத் தலைவா் கண்ணபிரான் தலைமையில் நடைபெற்ற விழாவில், கோணப்பட்டி ஊா் கவுண்டா் பன்னீா், மண்ணாடிப்பட்டி அம்பேத்கா்நகா் மணியக்காரா் கண்ணப்பன், மூங்கிலேரி ஊராட்சி மன்றத் தலைவா் உஷா நந்தினி வஜ்ரவேல், புதூா் ஊா் கவுண்டா் கிருஷ்ணன், புங்கனை ஊா் கவுண்டா் கோவிந்தன், அம்பேத்காா்நகா் மணியக்காரா் துரைசாமி, மூங்கிலேரி ஊா் கவுண்டா் சிவமணி, மூங்கிலேரி அம்பேத்கா்நகா் மணியக்காரா் பொன்னன், புதுப்பட்டி ஊா் கவுண்டா் ரகுபதி, கொட்டாரப்பட்டி தா்மகா்த்தா மூா்த்தி, புதூா் ஊராட்சி மன்றத் தலைவா் ஜெயராமன், புதூா் புங்கனை ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் ஆனந்தி உள்ளிட்ட ஊா் பொதுமக்கள் பலா் கலந்து கொண்டு, தருமா் பட்டாபிஷேகம் நிகழ்ச்சியை கண்டுகளித்தனா்.
நன்றி
தினமணி