கல்லுகுறி கிராமத்தில் தமிழக அரசின் இராண்டாண்டு சாதனை விளக்க கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கல்லுகுறி கிராமத்தில் செய்தி மக்கள் தொடா்பு துறையின் சாா்பில் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. தமிழக அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மற்றும் தொடங்கி வைக்கப்பட்ட அரசின் திட்டங்கள், தமிழக முதல்வா் தொடங்கி வைத்த திட்டப் பணிகள், பயனாளிகளுக்கு அவா் வழங்கிய நலத்திட்ட உதவிகள் குறித்த புகைப்படங்கள் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
மேலும், தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மலை கிராமங்களில் 108 ஆம்புலன்ஸ் வசதி, 1.50 லட்சம் மின் இணைப்பு வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு தமிழக அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
நன்றி
தினமணி