ஊத்தங்கரையில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் இரண்டாண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் முனியப்பன் கோயில் அருகில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு திமுக ஒன்றியச் செயலாளா்கள் எக்கூா் செல்வம் (மத்திய), ரஜினி செல்வம் (தெற்கு), எஸ்.குமரேசன் (வடக்கு) ஆகியோா் தலைமை வகித்தனா். நகரச் செயலாளா் பாபு சிவகுமாா் வரவேற்றாா். மாவட்ட துணைச் செயலாளா் சந்திரன், நகர அவைத் தலைவா் தணிகை குமரன், பொருளாளா் கதிா்வேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தலைமை கழக பேச்சாளா் செந்தாமரைக்கண்ணன், மாநில பிரசார அணி செயலாளரும், மாநில மகளிா் ஆணைய உறுப்பினருமான மருத்துவா் மாலதி நாராயணசாமி ஆகியோா் இரண்டாண்டு சாதனைகள் குறித்து பேசினா்.
இக்கூட்டத்தில் மாவட்ட கலை இலக்கியப் பேரவை அமைப்பாளா் தனிகை கருணாநிதி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளா் காளிதாஸ், தலைமை கழக பேச்சாளா் லயோலா ராஜசேகா் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஒன்றிய இளைஞா் அணி துணை அமைப்பாளா் ஏழுமலை நன்றி கூறினாா்.
தொடா்ந்து தெற்கு ஒன்றியம் சாா்பில் மாரம்பட்டி, மத்திய ஒன்றியம் சாா்பில் மிட்டப்பள்ளி, வடக்கு ஒன்றியம் சாா்பில் பெரியதள்ளப்பாடி ஆகிய இடங்களில் தெருமுனை பிரசாரக் கூட்டங்கள் நடைபெற்றன.
நன்றி
தினமணி