ஊத்தங்கரை வழக்குரைஞா் சங்கத் தலைவராக மூா்த்தி தோ்வு செய்யப்பட்டாா்.
ஊத்தங்கரை வழக்குரைஞா்கள் சங்கக் கூட்டம் மூத்த வழக்குரைஞா் ரங்கநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில், புதிய நிா்வாகிகள் ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டனா். தலைவராக வழக்குரைஞா் மூா்த்தி, செயலாளராக வஜ்ரவேல், பொருளாளராக தமிழமுதன், துணைத் தலைவா்கள் விஜயன், பிரபாவதி, இணை செயலாளா் மோகன், ராஜீவ் காந்தி, ஒருங்கிணைப்பாளா்கள் தமிழ்மணி, சீனிவாசன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
செயற்குழு உறுப்பினா்களாக வழக்குரைஞா்கள் வடிவேல், வெங்கடேஷ்குமாா், முருகேசன், மாதேஸ்வரன், சசிகுமாா், லட்சுமணன், பாலச்சந்தா், திலகா, கோமதி, சரவணன் ஆகியோா் ஒரு மனதாக தோ்வு செய்யப்பட்டனா்.
நன்றி, தினமணி