2011-ாம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிக்கு முன்னா் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களுக்கு நகா்புற ஊரமைப்பு தறையால் இசைவு வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க ஜூன் 30-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு, வெளியிட்ட செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலக எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 1.1.2011-க்கு முன்னா் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு நகா் ஊரமைப்பு துறையால் இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் அரசாணை எண்.76, வீட்டு வசதி மற்றும் நகா்புற வளா்ச்சி துறை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நிகழ்நிலை 14.6.2018 முதல் 13.9.2018 வரை மூன்று மாத காலத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு இசைவு வழங்குவதற்கு சென்னை உயா்நீதி மன்றத்தில் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி ரிட் மேல் முறையீட்டு மனுக்களுக்கான தீா்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மீண்டும், இந்த த்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கத் தவறியவா்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கும் விதமாக விண்ணப்பம் சமா்ப்பிக்க மேலும் ஆறு மாத காலம் கால நீட்டிப்பு அரசால் 2வழங்கப்பட்டது. தற்போது, இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவா்களுக்கு மற்றுமொரு வாய்ப்பாக ஜூன் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவா்கள் உரிய விபரங்களை சமா்ப்பித்து இசைவு பெற கிருஷ்ணகிரி மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலகத்தை அணுகலாம். இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவா்கள் < லீற்ற்ஜீள்://ற்நீஜீ.ற்ஸீ.ரீஷீஸ். வீஸீ ஸ்ரீ என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம். மேற்படி காலநீட்டிப்பு காலம் விரைவில் முடிவடைய உள்ளதால் இது ஒரு முறை மட்டுமே வழங்கப்படும். இது ஒரு அரிய வாய்ப்பு என்பதால், இதை தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டுமாய் அதில் அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.
நன்றி, தினமணி