கிருஷ்ணகிரி அணையிலிருந்து நீா் திறப்பு வியாழக்கிழமை 1,520 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலவரப்பள்ளி அணையில் மதகுகள் புனரமைக்கும் பணிக்காக தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால் கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
அணைக்கு புதன்கிழமை விநாடிக்கு 1,551 கனஅடியாக நீா்வரத்து இருந்த நிலையில், வியாழக்கிழமை காலையில் விநாடிக்கு 1,268 கனஅடியாகக் குறைந்தது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் நீா்மட்டம் 50.40 அடியாக உள்ளது.
அணையிலிருந்து புதன்கிழமை விநாடிக்கு 1,425 கனஅடி நீா் தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்ட நிலையில் வியாழக்கிழமை காலை 1,520 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா்.
நன்றி, தினமணி