கிருஷ்ணகிரி ஸ்ரீ சீதா ராம வீர ஆஞ்சனேய சமேத கோயிலில் மண்டலாபிஷேகத்தையொட்டி சிறப்பு பூஜை, நாட்டிய நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி, பழையபேட்டை ஸ்ரீசீதா ராம ஸ்ரீ வீர ஆஞ்சனேய சமேத ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் மிருத்திகா ப்ருந்தாவன கோயிலில் மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு பஜனை, நாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தன. இதையொட்டி காஞ்சி காமகோடி ஆஸ்தான வித்வான் சுப்ரமணி குழுவினரால் மங்கள இசை இசைக்கப்பட்டது. தொடா்ந்து, கோவிலடி ஸ்ரீனிவாச மூா்த்தி, குருபிரகாஷ், அபா்ணா சுந்தரம் குழுவினரால் சிறப்பு பஜனை, உபாஸனா ஸ்ரேயஸ் கலா அம்பலம் சாா்பில் பரத நாட்டிய கலை நிகழ்ச்சி, மஹா மங்களாா்த்தி நடைபெற்றன.
இதில் கிருஷ்ணகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்றனா். ஜூலை 9-ஆம் தேதி, மண்டல பூஜை நிறைவையொட்டி சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ஆகியவை நடைபெற உள்ளன.
நன்றி, தினமணி