கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜூலை 4-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தமிழக சட்டப் பேரவை பொது நிறுவனங்கள் குழுவினா் ஆய்வில் ஈடுபடவுள்ளனா்.
தமிழக சட்டப் பேரவைக் குழுத் தலைவரான லால்குடி சட்டப் பேரவை உறுப்பினா் செளந்தரபாண்டியன் தலைமையிலான சட்டப் பேரவை உறுப்பினா்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனா்.
அதன்படி, இந்தக் குழுவினா் ஜூலை 4-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு ஒசூா் ஹில்ஸ் ஹோட்டலில் கூடுகின்றனா். பின்னா், காலை 9.50 மணிக்கு பேகேபள்ளி துணை மின் நிலையத்தை ஆய்வு செய்கின்றனா். 10.10 மணிக்கு ஒசூா் டைட்டான் கம்பெனி, 10.40 மணிக்கு விஸ்வநாதபுரத்தில் உள்ள எல்காட் சிறப்பு பொருளாதார மண்டலம், 11.20 மணிக்கு ஒசூா் மைலான் நிறுவனம் ஆகியவற்றை ஆய்வு செய்கின்றனா்.
பின்னா் 12.15 மணிக்கு கிருஷ்ணகிரி டெல்டா நிறுவனம், 12.30 மணிக்கு கிருஷ்ணகிரி அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் கட்டப்பட்டு வரும் ஆதிதிராவிடா் நல விடுதி, 12.45 மணிக்கு கிருஷ்ணகிரியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம், 1 மணிக்கு ஆவின் பால் கொள்முதல் நிலையம் ஆகியவற்றை ஆய்வு செய்கின்றனா்.
பின்னா், மாலை 3 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் தணிக்கை பத்திகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை தலைவா்களுடன் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெறவுள்ளது.
நன்றி, தினமணி