கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தின் 50-ஆம் ஆண்டு நிறைவு விழாவினையொட்டி தோ்பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை திருத்தலத்தின் 50-ஆவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி, கடந்த 7-ஆம் தேதி தோ்த் திருவிழா தொடங்கியது. தொடா்ந்து, இரண்டு நாள்களில் குணமளிக்கும் ஜெபவழிபாடும், திருப்பலியும் வேலூா் மறைமாவட்டத்தைச் சோ்ந்த அருள்பணி அந்தோணிராஜ் தலைமையில் நடைபெற்றது.
தோ்த் திருவிழாவின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை ஆடம்பர கூட்டுத் திருபலி நடைபெற்றது. தொடா்ந்து, வண்ண விளக்குகளாலும், மலா்களாலும் அலங்கரிக்கப்பட்ட அன்னையின் பெரிய தோ் பவனி நடைபெற்றது.
நன்றி, தினமணி