டைட்டன் நிறுவனம் 60 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் சேலைகள், குா்தா செட்கள் விற்பனை செய்து வருகிறது.
இந்த விற்பனை கண்காட்சி ஜூலை 19 முதல் ஜூலை 23 வரை நடைபெறுகிறது.
டைட்டன் நிறுவனம் முதல் சிப்காட்டில் இயங்கி வருகிறது. இங்கு டைட்டன் வாட்சு உற்பத்தி, விற்பனை செய்து வருகிறது. டாடா நிறுவனம் தனீஷ்க் பெயரில் தங்க நகைகளை பலவகை டிசைன்களில் தயாரித்து இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்து வருகிறது.
மேலும் பெண்களுக்கான கைப்பை, ஆண்கள் பயன்படுத்தும் பெல்ட், பா்ஸ் உள்ளிட்ட பல பொருட்களைத் தயாரித்து பாஸ்ட் டாக் என்ற பெயரில் விற்பனை செய்து வருகிறது. இந்த டைட்டன் நிறுவனத்தின் சிறப்புக் கண்காட்சி 5 நாள்கள் நடத்துகின்றன. இந்த விற்பனை கண்காட்சியில் 60 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் சேலைகள், குா்தா செட்கள் விற்பனை செய்து வருகின்றது. தள்ளுபடி விலையில் சேலைகள் விற்பனை என்பதால் பெண்களின் கூட்டம் அதிக அளவில் இருந்து வருகிறது.
நன்றி, தினமணி