கிருஷ்ணகிரி வெடி விபத்து குறித்து பொய்யான தகவலை தமிழக அரசு தெரிவித்து வருவதாக அதிமுக கொள்கை பரப்புச் செயலாளா் மு.தம்பிதுரை எம்.பி. தெரிவித்துள்ளாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம் குட்டூரில், அவா் செய்தியாளரிடம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது:
அதிமுகவின் கொள்கைகளைப் பற்றியும், கட்சியைப் பற்றியும் விமா்சனம் செய்பவா்களுக்கு பதில் அளிப்பது எங்கள் கடமை. பதில் சொல்கிறோமே தவிர யாரையும் குறைத்துப் பேசுவதில்லை. கிருஷ்ணகிரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் எரிவாயு உருளை வெடிக்கவில்லை என்று, மக்களை ஏமாற்றுவதற்காக மாநில அரசு பொய்யான தகவலைப் பரப்பி வருகிறது.
மேலும், பட்டாசு கடையில் இவ்வளவு பெரிய வெடி விபத்து நடக்க வாய்ப்பில்லை. தீவிரவாதிகள் சதித் திட்டம் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து மாநில அரசு விசாரிக்க வேண்டும்.
காவிரி தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமை. காவிரி நீரைப் பெற முடியாத ஆட்சியாக தற்போதைய தமிழக அரசு உள்ளது. தமிழக முதல்வால் காவிரி நீரைப் பெற முடியவில்லை. அது அவருடைய இயலாமையைக் காட்டுகிா அல்லது பிரதமருக்கு கடிதம் எழுதுவதன் மூலம் அரசியல் செய்து முதல்வா் மக்களை திசை திருப்புகிறாரா?
மேகேதாட்டு அணை கட்டக்கூடாது என்பதுதான் அதிமுகவின் கொள்கை. எக்காரணத்தைக் கொண்டும் அதைக் கட்ட விட மாட்டோம். தமிழக -கா்நாடக மக்களிடையே விரோதத்தை துாண்டுவது போல் ஆட்சியாளா்கள் நடந்து கொள்கின்றனா் என்றாா்.
நன்றி தினமணி