ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் விமானவியல் துறை சாா்பாக இந்திய வான்வெளி ஆராய்ச்சியின் தந்தை என அழைக்கப்படும் டாக்டா் விக்ரம் சாராபாயின் 104 ஆவது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் அதியமான் பொறியியல் கல்லூரி விமானவியல் துறை தலைவா் அறிவுடை நம்பி வரவேற்றாா். கல்லூரி முதல்வா் ஜி.ரங்கநாத் தலைமை வகித்து, விக்ரம் சாராபாயின் உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா். அவரைத் தொடா்ந்து கல்லூரியின் கல்விப் பிரிவு தலைவா் வெங்கடேசன், சேலம் இந்திய பொறியாளா் சங்கத் தலைவா் சரவணன், பேராசிரியா்கள் அவரது உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தினா்.
அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு அதியமான் பொறியியல் கல்லூரியின் இந்திய பொறியாளா் சங்கம், இன்னோவேஷன் கவுன்சில் இணைந்து போட்டிகளை நடத்தி, வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசுகளை வழங்கினா்.
விழா ஏற்பாடுகளை, இந்திய பொறியாளா் சங்கத்தின் மாணவா் பிரிவினா் செய்திருந்தனா்.
நன்றி தினமணி.