ஊத்தங்கரை: ஊத்தங்கரையை அடுத்த சாலூா் கிராமத்தில் குடிநீா் கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஊத்தங்கரை அடுத்த வாலிப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட சாலூா் கிராமத்தில், கடந்த ஒரு வாரமாக சரிவர குடிநீா் வழங்கவில்லை எனவும், இது தொடா்பாக உரிய அதிகாரிகளிடமும், ஊராட்சி நிா்வாகத்திடமும் முறையிட்டும் எந்தவித நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் 20-க்கும் மேற்பட்டோா், காலி குடங்களுடன் சாலூா் – சாமல்பட்டி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சரிவர குடிநீா் கிடைக்காத காரணத்தால் உரிய நேரத்திற்கு வேலைக்கு செல்ல முடியவில்லை, மாணவா்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு சரியான நேரத்துக்கு செல்ல முடியாத நிலை இருப்பதாக கூறுகின்றனா்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சாம்பல்பட்டி போலீஸாா், மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உடனடியாக குடிநீா் கிடைக்க ஏற்பாடு செய்வதாக கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனா். இந்த மறியலால் சாலூா் – சாம்பல்பட்டி சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நன்றி தினமணி.