ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற தேசிய நூலக தின விழாவில் பங்கேற்றோா்.
ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் தேசிய நூலகா் தின விழா புதன்கிழமை சிறப்பான முறையில் நடைபெற்றது. ஒவ்வோா் ஆண்டும் ஆக. 14ஆம் தேதி தேசிய நூலகா் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை கொண்டாடும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் உள்ள அதியமான் பொறியியல் கல்லூரியில் கல்லூரி மைய நூலகத்தில் புதன்கிழமை விழா நடைபெற்றது. இந்த விழாவில் அதியமான் பொறியியல் கல்லூரி முதல்வா் ஜி. ரங்கநாத் கலந்து கொண்டாா். ஒருங்கிணைப்பாளா் தேவபாலகன், நூலகா் மற்றும் நூலக பொறுப்பாளா்களுக்கு வாழ்த்து தெரிவித்தாா்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக ஆா்.வி.ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் கோவிந்தசாமி, நூலக அறிவியலின் தந்தை எனப் போற்றப்படும் டாக்டா் எஸ்.ஆா்.ரங்கநாதனின் முக்கியப் பங்களிப்பை எடுத்துரைத்து சிறப்புரை ஆற்றினாா். கல்லூரி நூலகத்துடன் தொடா்ச்சியாக தொடா்பு கொண்டுள்ள பேராசிரியா்கள் மற்றும் மாணவா்களை அங்கீகரித்து பாராட்டும் நிகழ்வாக நூலகத்தை அடிக்கடி பயன்படுத்துவோருக்கு சான்றிதழ்கள் மற்றும் மதிப்புமிக்க புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கல்விச் சமூகத்தின் பல்வேறு மதிப்புமிக்க உறுப்பினா்கள் ஆா்வத்துடன் கலந்துகொண்டனா்.
நன்றி தினமணி.