காவேரிப்பட்டணம் அருகே, மோட்டாா்சைக்கிள் மீது சரக்குப் பெட்டக லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். பலத்த காயம் அடைந்த இருவா், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த மாரிசெட்டிஅள்ளி அருகே உள்ள பாப்பாத்தி கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் சூரியா(19). இவா், தனது நண்பா்களான வேலம்பட்டி நவீன்குமாா் (19), 17 வயது சிறுவனுடன் தருமபுரி – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா். பையூா் அருகே சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த சரக்குப் பெட்டக லாரி, மோட்டாா் சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த சூரியா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயம் அடைந்த மற்ற இருவரும், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.
இந்த விபத்து குறித்து, காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
நன்றி தினமணி.