கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் வருகிற 27ம் தேதி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவருமான சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், கிருஷ்ணகிரி, பர்கூர் ஊத்தங்கரை, சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட, வட்டார, நகர அணியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வருகிற 27ம் தேதி காலை 10 மணிக்கு காவேரிப்பட்டணம் ஓட்டல் பாலா கூட்ட அரங்கில் நடக்கிறது. கூட்டத்தில், காவேரிப்பட்டணத்தில் உள்ள காந்தி மண்டபம் குறித்தும், வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. எனவே மாவட்ட, வட்டார, நகர மற்றும் கட்சி அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்கள் ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுகொள்கிறேன். இவ்வாறு தனது அறிக்கையில் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்