கிருஷ்ணகிரியில் மாவட்ட திமுக மாணவரணி சார்பில், மாணவி அனிதா நினைவு நாளையொட்டி, அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
ஒன்றிய அரசு கொண்டு வந்த நீட் தேர்வால், தனது மருத்துவர் கனவு பொய்யானதையடுத்து உயிரிழந்த மாணவி அனிதாவின் 5ம் ஆண்டு நினைவு நாளையொட்டி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில், கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை அருகில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சல் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஜெயேந்திரன் தலைமை வகித்தார். மாணவரணி துணை அமைப்பாளர்கள் கவுதம், ராமச்சந்திரன், ஹரிஹரன், மணிபாரதி, உமாவதி ஆகியோர் முன்னிலை வகித்ததர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக நகர செயலாளர் நவாப் பங்கேற்று, மாணவி அனிதாவின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யும் நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். அப்போது, நீட் தேர்விற்கு விலக்க கோரி, ஒன்றிய அரசு மற்றும் ஆளுநர் ரவிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சாவித்திரி கடலரசுமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் அஸ்லாம், ஒன்றயி செயலாளர் தனசேகரன், இளைஞரணி துணை அமைப்பாளர் சங்கர், விவசாய அணி அமைப்பாளர் இளையராஜா, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் விஜய் ராஜசேகர், துணை ஒருங்கிணைப்பாளர் சுரேந்தர், நகர்மன்ற உறுப்பினர் பாலாஜி மற்றும் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாள் கிரி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். முடிவில் முன்னாள் மாணவரணி வேலுமணி நன்றி கூறினார்.
![](https://www.hellokrishnagiri.in/wp-content/uploads/2023/09/WhatsApp-Image-2023-08-04-at-12.43.12-720x620.jpeg)