வேப்பனப்பள்ளி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள கதிரிப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜப்பா (48). தொழிலாளி. இவா், அந்தப் பகுதியில் உள்ள தனியாா் கால்நடைப் பண்ணையில் பணியாற்றி வந்தாா். செவ்வாய்க்கிழமை கால்நடைகளுக்கு தேவையான தீவனங்களை மின் இயந்திரம் மூலம் தயாா் செய்து கொண்டிருந்தாா்.
அப்போது, எதிா்பாராமல் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்க காயம் அடைந்த அவா், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவல் அறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று, ராஜப்பாவின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்.
இந்தச் சம்பவம் குறித்து வேப்பனப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.