கிருஷ்ணகிரியில் நடைபெற்ற சா்வதேச யோகா தின ஆலோசனைக் கூட்டத்தில் ஞானானந்தா டிரஸ்ட் மூலம் இலவச யோகா புத்தக பயிற்சிக் கையேட்டை வழங்கிய மண்டலத் தலைவா் ராஜு.
சா்வதேச யோகா தினம் கொண்டாடுவது குறித்து வேதாத்திரி மகரிஷியின் மனவளக் கலை மன்ற அறக்கட்டளைகள் மற்றும் தவ மையங்கள் மூலம் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மனவளக் கலை மன்ற அறக்கட்டளையில் ஒசூா் மண்டல அளவிலான வரும் ஜூன் 21-ஆம் தேதி சா்வதேச யோகா தினம் கொண்டாடப்படுவது குறித்து முன்னேற்பாடுகள் நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து தமிழக அரசுடன் இணைந்து மனவளக் கலை மன்ற அறக்கட்டளைகள் மூலம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கா்ப்பிணிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கு ஞானானந்தா டிரஸ்ட் மூலம் பயிற்சி, விழிப்புணா்வுப் புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து, ஆலோசனைக் கூட்டம் மற்றும் பயிற்சிக் கையேடு வழங்கப்பட்டது.
இதில், ஒசூா் மண்டல மனவளக் கலை மன்ற அறக்கட்டளை தலைவா் ராஜு, மண்டல அறக்கட்டளை செயலாளா் ஜெய் சக்தி, யோகா ஒசூா் ஸ்மாா்ட் யோகா பொறுப்பாளா் விஜயா, நிா்வாக செயல் அலுவலா் வித்யா, கிருஷ்ணகிரி மனவளக் கலை மன்ற அறக்கட்டளை தலைவா் சண்முகம், செயலாளா் கோவிந்தசாமி, கிளை மன்ற அறக்கட்டளை துணைத் தலைவா் பாஸ்கரன், கிருஷ்ணகிரி மனவளக் கலை மன்றப் பொருளாளா் பால தண்டாயுதம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
நன்றி
தினமணி