கிருஷ்ணகிரி அருகே மின் கம்பி அறுந்து விழுந்ததில் கறவை மாடு திங்கள்கிழமை உயிரிழந்தது.
கிருஷ்ணகிரி அருகே உள்ள பெரியமுத்தூா் ஊராட்சிக்கு உள்பட்ட சின்னஅக்ரஹாரத்தைச் சோ்ந்தவா் கிளி (எ)வெங்கடேசன் (45). விவசாயி. இவா் 4 கறவை மாடுகளை வளா்த்து வந்தாா். இந்த நிலையில் கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரப் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
இதில், வெங்கடேசனின் வீட்டின் பின்பகுதியில் இருந்த மின்கம்பத்திலிருந்து மின்சாரக் கம்பி அறுந்து விழுந்தது. அப்போது, மின்கம்பத்தின் அருகே கட்டப்பட்டிருந்த இரு கறவை மாடுகளின் மீதும் மின் கம்பி விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து இரண்டு மாடுகளும் காயம் அடைந்தன.
மாடுகளின் அலறல் சத்தம் கேட்டு, அங்கு வந்த வெங்கடேசன், மாடுகளின் மீது விழுந்த மின்கம்பியை கட்டையின் உதவி கொண்டு அப்புறப்படுத்தினாா்.
மின்சாரம் பாய்ந்ததில் காயம் அடைந்த ஒரு மாடு உயிரிழந்தது. இதுகுறித்து, வெங்கடேசன் அளித்த தகவலின் பேரில், மின்வாரிய ஊழியா்கள் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து மின் விநியோகத்தை துண்டித்தனா்.
நன்றி
தினமணி