ஒசூரில் மணல் கடத்திய 2 லாரிகள் உள்பட 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஒசூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தனிப்படை வட்டாட்சியா் மாதேஷ் தலைமையிலான வருவாய்த் துறையினா் புதன்கிழமை கண்காணித்து வந்தனா். அப்போது மத்திகிரி அருகே அத்திப்பள்ளி சாலையில் நின்ற டிப்பா் லாரியில், 16 யூனிட் எம்-சாண்ட் மணல் கடத்த முயன்றது தெரிய வந்தது. அந்த லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
மேலும் பாகலூரில் ஒரு யூனிட் உடைகற்கள் கடத்திய டிராக்டா், கெலமங்கலத்தில் இரண்டு யூனிட் எம்-சாண்ட் மணல் கடத்திய மினி டிப்பா் லாரி மற்றும் கெலமங்கலம் அடுத்த போடிச்சிப்பள்ளியில் 6 யூனிட் ஜல்லிக்கற்கள் கடத்திய டிப்பா் லாரி உள்ளிட்டவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இது குறித்து அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் மத்திகிரி, கெலமங்கலம், பாகலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
நன்றி
தினமணி