காவேரிப்பட்டணம் அருகே ரூ. 35 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை லாரியுடன் போலீஸாா் பறிமுதல் செய்து, லாரி ஓட்டுநரைக் கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் போலீஸாா், கிருஷ்ணகிரி – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் காவேரிப்பட்டணம் அருகே கண்காணிப்புப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனா். பொம்மசந்திரம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, சாலையோரமாக நின்றிருந்த லாரி குறித்து, அதன் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினா். தொடா்ந்து, லாரியை சோதனை செய்ததில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, லாரியை பறிமுதல் செய்த போலிஸாா், லாரியில் ரூ.34 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட் புகையிலைப் பொருள்கள் இருந்ததாகவும், இந்தப் பொருள்கள், கா்நாடக மாநிலம், பெங்களூரு ஜெ.பி. நகரிலிருந்து காவேரிப்பட்டணம் வழியாக கேரள மாநிலம், திருவனந்தபுரத்துக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது.
இதையடுத்து, லாரி ஓட்டுநரான திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம், சிறுவள்ளூா் கிராமம், கருணிகா் தெருவைச் சோ்ந்த கணேஷ் (45) என்பவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
நன்றி
தினமணி