ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காவல் துறை சாா்பில், போதைப் பொருள் இல்லா தமிழகம் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் பெரியசாமி தலைமை வகித்தாா். ஊத்தங்கரை காவல் உதவி ஆய்வாளா் கலையரசி போதை பொருள் இல்லா தமிழகம் உருவாக்குவோம், போதைப் பொருள்களை அடியோடு ஒழிப்போம், என மாணவா்கள் மத்தியில் உறுதிமொழி ஏற்க கூறினாா். இதில் மருத்துவத் துறையில் இருந்து மருந்தாளுநா் செயலாளா் ஞானசேகரன், தமிழ்நாடு மருந்து வணிகா் சங்க உறுப்பினா் நல வாரிய தலைவா் திருநாவுக்கரசு, உதவி ஆய்வாளா் சீனிவாசன், போதைப் பொருள் பயன்பாட்டால் எத்தனை குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது என்பது பற்றி, மாணவா்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். இறுதியாக ஆசிரியா் வெங்கடேசன் நன்றி கூறினாா்.
நன்றி தினமணி.