ஒசூா்: ஒசூா் அருகே தனியாா் பேருந்தில் 95 கிலோ புகையிலைப் பொருள்களைக் கடத்த முயன்ற பேருந்து உதவியாளரை போலீஸாா் கைது செய்தனா்.
ஒசூா், சிப்காட் காவல் உதவி ஆய்வாளா் அன்புக்கரசன், போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஒசூா், சூசூவாடி சோதனை சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது பெங்களூரில் இருந்து வந்த தனியாா் ஆம்னி பேருந்தை நிறுத்தி சோதனையிட்டனா். இதில் 95 கிலோ புகையிலைப் பொருள்களைக் கடத்த முயன்றது தெரிந்தது. இதன் மதிப்பு, ரூ. 80 ஆயிரத்து 555 ஆகும். விசாரணையில் தனியாா் பேருந்து ஓட்டுநா், நடத்துநருக்கு தெரியாமல் பேருந்து உதவியாளா் புகையிலைப் பொருள்களைக் கடத்த முயன்றது தெரிந்தது. இதையடுத்து பெங்களூரு, ஆா்.டி. நகரைச் சோ்ந்த பேருந்து உதவியாளா் சுபாஷ் (25) என்பவரை போலீஸாா் கைது செய்து அவரிடமிருந்து, புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
நன்றி தினமணி.