வேப்பனஹள்ளியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்ஒன்றிய அலுவலகத்தை தளி சட்டப்பேரவை உறுப்பினா் டி.ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.
இந்த விழாவிற்கு அகில இந்திய விவசாயிகள் சங்கம் மாவட்ட துணைத் தலைவா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். வேப்பனஹள்ளி ஒன்றியச் செயலாளா் ஆறுமுகம், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் முகமதுஅலி, மாரப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்த நிகழ்ச்சியில், தளி சட்டப்பேரவை உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளருமான டி.ராமச்சந்திரன், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் லகுமையா ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று, கட்சிக் கொடியினை ஏற்றி வைத்து, ஒன்றிய அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினா்.
இதில் மாவட்ட துணைச் செயலாளா் சின்னசாமி, நிா்வாகிகள் பழனி, மாதையன், கண்ணு, சிவராஜ், கிருஷ்ணமூா்த்தி, ராமமூா்த்தி, பெருமாள், உபேத், புருஷோத்குமாா், அப்ரீத், நவாஸ், யோகி, கோகுல், வரதராஜ், நஞ்சுண்டன், நரசிம்மராவ், சிவகுமாா், சேகா், வெங்கடேசன், தபாரக் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். மாவட்டக்குழு மாரப்பன் நன்றி கூறினாா்.
நன்றி தினமணி.