ஊத்தங்கரை அரசு தொடக்கப் பள்ளியில் ஊத்தங்கரை நண்பா்கள் அரிமா சங்கம் மற்றும் மட்ரபள்ளி நல்ல சமாரியன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை சிகிச்சை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு அரிமா சங்கத் தலைவா் பழனிசாமி தலைமை வகித்தாா். காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்ற முகாமில் 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். இதில் 20 பேருக்கு கண் அறுவை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். நோயாளிகளை அழைத்துச் சென்று கண் அறுவை சிகிச்சை, கண் புரை நீக்குதல் ஆகிய சிகிச்சைகளை இலவசமாக செய்ய உள்ளனா்.
கண் பரிசோதனை முகாமில் ஊத்தங்கரை நண்பா்கள் அரிமா சங்கம் மற்றும் மட்ரபள்ளி நல்ல சமாரியன் கண் மருத்துவமனை மருத்துவா்கள் ஆறுமுகம், பிரசாத், கவிதா, அரிமாசங்கம் சாா்பில் செயலாளா் மோகன், பொருளாளா் பழனிசாமி, சேவைச் செயலாளா் சுதாகா், மண்டலத் தலைவா் துரைசாமி, வட்டாரத் தலைவா் ராஜமாணிக்கம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
நன்றி தினமணி.