ஊத்தங்கரையில் உள்ள காசி விஸ்வநாதா், லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில், சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு வழிபாடு செய்து சமபந்தி விருந்து நடைபெற்றது.
முன்னதாக, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன. சமபந்தி நிகழ்ச்சிக்கு மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் ரஜினி செல்வம் தலைமை வகித்தாா். மாவட்ட உறுப்பினா் கலைவாணி, இந்துசமய அறநிலையத் துறை ஆய்வாளா் பால்வண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயல் அலுவலா் மல்லிகா, திமுக நகர செயலாளா் பாபு சிவகுமாா், பேரூராட்சி துணைத் தலைவா் கலைமகள் தீபக், வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
நன்றி தினமணி.