ஊத்தங்கரை: ஊத்தங்கரை ஸ்ரீமகா முனியப்பன் சுவாமி கோயில் திருவிழா செவ்வாய்கிழமை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
ஆண்டுதோறும் ஆடி 18- க்கு அடுத்து வரும் செவ்வாய்கிழமை ஸ்ரீ மகா முனியப்பன் சுவாமி கோயில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் செவ்வாய்கிழமை அதிகாலை ஸ்ரீ விநாயகா், மகா முனியப்பன் சுவாமிக்கு சிறப்பு அலங்கார, அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
அதனைத் தொடா்ந்து பக்தா்கள் சுவாமி கரகம், ஆணி செருப்பு அணிந்தும், வேல் எடுத்து வந்தும் நோ்த்திக் கடன் செலுத்தினா். இதில் ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினா் டி.எம்.தமிழ்ச்செல்வம் கலந்துகொண்டு தரிசனம் செய்தாா். அதிமுக வடக்கு ஒன்றியச் செயலாளா் வேடி, நகரச் செயலாளா் சிக்னல் ஆறுமுகம், மாவட்ட துணைச் செயலாளா் சாகுல்அமீது, அவைத் தலைவா் கே.ஆா்.சுப்பிரமணி உள்ளிட்ட ஏராளமான நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
ஊத்தங்கரை சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து பல ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா சிவசக்தி சண்முகம், சி.ஏ.கே.சந்திரன், ராஜி, ஸ்ரீமகா முனியப்பன் கொங்கு அறக்கட்டளையினா் செய்திருந்தனா்.
நன்றி தினமணி.